சந்திரயான் 3 விண்கலம் எடுத்த பூமி, நிலவின் புகைப்படம் வெளியீடு!

Chandrayaan-3 Lander

நிலவை நெருங்கிப் பயணித்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், பூமியில் இருந்து கிளம்பும் போது எடுத்த பூமியின் புகைப்படத்தையும் நிலவின் சுற்று வட்ட பாதையில் நுழையும் போது எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தையும் படம்பிடித்து அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Chandrayaan-3
Chandrayaan-3 [file image]

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.

இதனை தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு நேற்று (09.08.2023) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்தது, இப்போது 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்பாதையை மேலும் குறைப்பதற்கான அடுத்தகட்ட செயல்பாடு ஆகஸ்ட் 14, 2023 அன்று 11:30 முதல் 12:30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தற்போது, சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்ட நாளில் லேண்டர் இமேஜர் (Lander Imager) கேமரா எடுத்த பூமியின் மேற்பரப்பு புகைப்படம் மற்றும் அதற்கு அடுத்த நாள் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டப்பின், Lander Horizontal Velocity Camera மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்