நிலவை நெருங்கும் சந்திராயன்-3 இரண்டாம் சுற்றுவட்ட பாதை குறைப்பு வெற்றி!

Chandrayaan-3

சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட  சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்தது, இப்போது 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் சுற்றுப்பாதையை மேலும் குறைப்பதற்கான அடுத்தகட்ட செயல்பாடு ஆகஸ்ட் 14, 2023 அன்று 11:30 முதல் 12:30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்