Chandrayaan-3:ரோவர் நிலவில் நடைபயணம்,விரைவில் புது அப்டேட் -இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை தொடங்கிய நிலையில் சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில் வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறகிய உலகின் முதல் நாடாகவும் , நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது.இந்நிலையில் இஸ்ரோ ரோவரின் செயல்பாடு குறித்து ட்வீட் செய்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டது சந்திரனுக்காக உருவாக்கப்பட்டது????!Ch-3 ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கியது இந்தியா நிலவில் நடைபயணம் செய்தது ! மேலும் புதுப்பிப்புகள் விரைவில் என பதிவிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
Chandrayaan-3 ROVER:
Made in India ????????
Made for the MOON????!The Ch-3 Rover ramped down from the Lander and
India took a walk on the moon !More updates soon.#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 24, 2023