சந்திராயன்-3 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ!

Moon Image

சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் மூன்று முறை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இன்று நான்காம் கட்ட, இறுதி கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, சந்திராயன்-3 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.

சுற்றுப்பாதை குறைப்பு:

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.

அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 16, 2023 அன்று சுமார் 08.30 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது.

இறுதிகட்ட சுற்றுவட்டப்பாதை:

அதன்படி, இன்று இஸ்ரோ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும். சந்திராயன்-3இன் ப்ராபல்ஷன் பகுதி மற்றும் லேண்டர் பகுதி ஆகியவை தனித்தனி பயணங்களுக்கு தயாராகி வருவதற்கான நேரம் இது.

இந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 9ம் தேதி சந்திராயன்-3யின் லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் க்ளோசப் புகைப்படம் ஒன்றை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த புகைப்படத்தில் நிலவின் பள்ளங்கள் தெளிவாக தெரிகிறது.

Chandrayaan-3
Chandrayaan-3 [Image – isro]

நாளைய நிகழ்வு:

ப்ராபல்ஷன் பகுதியில் இருந்து லேண்டர் பகுதியானது நாளை (ஆகஸ்ட் 17, 2023) அன்று பிரிக்கப்படும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்