மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுகிறது. தற்போது லேண்டரின் தரையிறக்கும் பணி தொடங்கியது.
உலகமே மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி, நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இன்று மாலை 6.04 மணி அளவில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ கூறியிருந்த நிலையில், லேண்டரை நிலவில் தரையிறங்கும் பணியானது இன்று மாலை 5.44க்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்கியது. தற்பொழுது, வேகம் 5,700 குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பிறகு, போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே லேண்டர் வந்ததும் தரையிறங்க கட்டளை பிறப்பிக்கப்படும். பெங்களூரு தரைக் கட்டுப்பாடு மையத்திலிருந்து தரையிறங்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்ட பின், லேண்டரானது நிலவில் தரையிறங்கும்.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…