#Chandrayaan-3: ரோவர் தரையிறங்கும் முன் சோலார் பேனல் திறக்கும் அறிய காட்சி!

Chandrayaan-3 rover

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது.

லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இன்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய லெண்டரில் இருந்து சாய்வு பலகை வழியே ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. தற்போது, ரோவர் வெளியேறுவதற்கு முன் சோலார் பேனல் மற்றும் சாய்வுதளம் திறக்கும் காட்சியை வெளியிட்டுள்ளது.

ரோவர் வெளிவதற்கு முன், சாய்வுதளம் மற்றும் சோலார் பேனலின் எவ்வாறு செயல்பட்டது  என்றும், சந்திரயான்-3 திட்டத்தில் மொத்தம் 26 வரிசைப்படுத்தல் வழிமுறைகள் யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் (யுஆர்எஸ்சி)/இஸ்ரோ, பெங்களூரில் உருவாக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்