#BREAKING: சூரியனை நோக்கி பயணம்..! ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ..!
சூரியனை ஆய்வு செய்தவற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய செப்.2ம் தேதி காலை 11.50 மணி அளவில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் இஸ்ரோ ஏவுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்-2ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் துவக்கத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. துவக்க ஒத்திகை மற்றும் வாகன உள் சோதனைகள் முடிந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
மேலும், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்டம் வெற்றி அடைந்தால், இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்துதகவல்களை பெற முடியும். ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
PSLV-C57/Aditya-L1 Mission:
The preparations for the launch are progressing.The Launch Rehearsal – Vehicle Internal Checks are completed.
Images and Media Registration Link https://t.co/V44U6X2L76 #AdityaL1 pic.twitter.com/jRqdo9E6oM
— ISRO (@isro) August 30, 2023