அறிவியல்

Aditya L1 Mission: ஆதித்யாவின் 4வது சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு!

Published by
கெளதம்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் நான்காம் கட்ட சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த வார சனிக்கிழமை (செப்டம்பர் 2) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும். அதன்படி, செப்டம்பர் 2ல் அனுப்பப்பட்ட விண்கலம் கடந்த 13 நாட்களாக பூமி சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.

இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும். ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்கனவே தொடங்கிவிட்டது. சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.

கடந்த (3.09.2023) அன்று ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து, செப்டம்பர் 5ம் தேதி இரண்டாம் கட்டமாக புவி சுற்று வட்டப்பாதை 282 கிமீ x 40225 கிமீ உயர்த்தப்பட்டது.

மேலும், செப்டம்பர் 10 ம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. இதன் அடுத்த கட்டம் உயரம் அதிகரிப்பு இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஆதித்யா L1 விண்கலம் 4வது சுற்று வட்டப்பாதைக்கு உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, 256 கிமீ x 1,21,973 கி.மீ தூரத்திற்கு ஆதித்யா L1 விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு செப்டம்பர் 19ம் தேதி, அதிகாலை 2 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…

60 minutes ago

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

2 hours ago

புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…

12 hours ago

“அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு” கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…

12 hours ago

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…

13 hours ago

“மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம்” கைதுக்கு பின் சௌமியா அன்புமணி காட்டம்.!

சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…

13 hours ago