Aditya L1: 16 நாள் பூமியில்..மொத்தமாக 4 மாதம்.! சூரியனை நோக்கிய வெற்றி பயணம்.!

Aditya-L1

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை உருவாக்கி, விண்ணில் செலுத்தவுள்ளனர்

அதன்படி, ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளனர். தற்போது, விண்கலத்தை செலுத்துவதற்கான 24 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிகழ்வை காண பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் என பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணியானது நடைபெற்றது. அதன்படி, பிஎஸ்எல்வி ராக்கெட்டில் உள்ள நான்கு அடுக்குகளிலும் எரிபொருள் நிரப்பும் பணியானது முழுவதுமாக முடிக்கப்பட்டு, சூரியனை நோக்கி என்னை செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

பிஎஸ்எல்வி ராக்கெட் ஆனது செலுத்தப்பட்டவுடன் புவியின் தாழ்வு வட்டப்பாதையை சென்றடைவதற்கு 72 நிமிடங்கள் (1 மணி நேரம் 12 நிமிடங்கள்) ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு ராக்கெட்டில் இருக்கக்கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு மேற்பகுதியில் இருக்கக்கூடிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஆனது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றவிடப்படும்.

அதாவது, சந்திராயன் 3 விண்கலத்தை பூமியில் இருந்து உயரம் குறைக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசைக்கு பகுதியில் இருந்து மெதுவாக உயர்த்தியது போல, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை அதிகரிக்கும் பணியும் மெதுவாக நடைபெறும். ஆதித்யா எல்-1 விண்கலமானது பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும். இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும்.

இதன்பிறகு, பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (15 லட்சம் கி.மீ) தொலைவில் இருக்கும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) வைக்கப்படும். இந்த முழு திட்டமும் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது இந்த லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தவுடன் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளும் செயல்படத் தொடங்கும்.

இந்த எல்-1 புள்ளியில் வைக்கப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருக்கும் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன, மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்-1 -ஐ சுற்றி இருக்கக்கூடிய துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன. அதன்படி, சூரியனில் இருந்து துகள்கள் விண்வெளியில் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைப் பற்றியும், குரோமோஸ்பியர் மற்றும் கரோனா உட்பட சூரியனின் மேல் வளிமண்டலத்தை ஆய்வு செய்தும் தகவலை அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்