Aditya L-1: பூமியில் இருந்து 9.2 லட்சம் கி.மீ தூரத்தை கடந்தது ஆதித்யா-எல்1.! எல்-1 புள்ளியை நோக்கி பயணம்.!
கடந்த செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து ‘பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட்’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இலக்கை நோக்கி பயணம்:
இதனையடுத்து, பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருக்கக்கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு, சரியாக 648 கி.மீ உயரத்தில், ஆதித்யா-எல்1 விண்கலம் பிரிக்கப்பட்டு, வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கான, பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (15 லட்சம் கி.மீ) தொலைவில் உள்ள இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு:
இதன்பிறகு, ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் கட்ட புவி சுற்று வட்டப்பாதை கடந்த செப்-3-ஆம் தேதி வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதனைதொடர்ந்து, செப்-5ம் தேதி இரண்டாம் கட்ட புவி சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்ட நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சோலார் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி ஆதித்யா-எல்1 மூன்றாம் கட்ட சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது.
Aditya L-1: அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஆதித்யா எல்-1.! ஆய்வு முடிவை வெளியிட்டது இஸ்ரோ..!
செப்-15ம் தேதி 256 கிமீ x 1,21,973 கி.மீ தூரத்திற்கு ஆதித்யா எல்1 விண்கலம் உயர்த்தப்பட்டது. இதன்பிறகு செப்டம்பர் 19ம் தேதி இறுதிக்கட்ட சுற்றுவட்டப்பாதையை தாண்டிய ஆதித்யா எல்-1 விண்கலம், 16 நாட்களாக பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக உயர்த்தப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை கடந்தது.
அறிவியல் தரவுகள் சேகரிப்பு:
இதற்கிடையில், ஆதித்யா-எல்1-லிருக்கும் STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட்டது. இந்த ஆய்வு முடிவுகளையும், இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
AdityaL1 : ஆதித்யா விண்கலத்தின் புதிய பயணம்..! இஸ்ரோ அறிவிப்பு..!
இந்த நிலையில், தற்போது ஆதித்யா விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து, பூமியின் தாக்கக் கோளத்திலிருந்து வெற்றிகரமாகத் தப்பியிருக்கிறது. இப்போது அது சூரியன்-பூமி லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) நோக்கி அதன் பாதையில் செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூமியின் ஈர்ப்பு விசை தாக்கக் மண்டலத்திற்கு வெளியே இஸ்ரோ ஒரு விண்கலத்தை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். இதன்பிறகு ஆதித்யா எல் 1 விண்கலம் 110 நாட்களில் எல்1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடையும். தொடர்ந்து, நான்கு மாத பயணத்திற்கு பிறகு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1-இல் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கும் அனுப்பும். மேலும், பூமியின் ஈர்ப்பு விசை தாக்கக் மண்டலத்திற்கு வெளியே இஸ்ரோ ஒரு விண்கலத்தை அனுப்புவது இது இரண்டாவது முறை, இதற்கு முன்னதாக கடந்த 2013 -ஆம் ஆண்டு ‘மங்கள்யான்’ விண்கலம் ‘ விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.