டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை விதித்த சவுதி அரேபியா….!

சாம் ரயாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இயக்குனர் சாம் அவர்கள் டோபி மெக்யூர் நடித்த ஸ்பைடர் மேன் எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு உலகெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபிய அரசு இந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹீரோ தன்பாலின ஈர்ப்பாளராக சித்தரிக்கப்பட்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதால் தான் இப்படத்திற்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Rebekal