வெறும் ரூ.12,499 பட்ஜெட்..6ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! இந்தியாவில் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ05.!

சமீபத்தில் கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை சாம்சங் நிறுவனம் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது.

அதன்படி,  6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் மட்டும் ரூ.14,999 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் ஆனது 720 × 1600 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் (17.13 செ.மீ) எச்டி+ பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளதோடு மற்றும் 16 மில்லியன் நிறங்களை ஒன்றிணைத்து காட்டக்கூடியது. இதனால் நீங்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது நல்ல அனுபவத்தை வழங்கும்.

மீண்டும் அறிமுகமான ‘View Once’ அம்சம்.! டெஸ்க்டாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்.!

பிராசஸர்

ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் கேலக்ஸி ஏ05 போனில் பொருத்தப்பட்டுள்ளது. இது சாதாரண பயன்பாடுகள் மற்றும் குறைவான கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களுக்கு அருமையாக இருக்கும்.

இந்த பிராஸசர் ஏஐ அம்சங்களை மேம்படுத்துவதோடு, ஆர்ம் மாலி ஜி52 ஜிபியுவை 1GHz வரை பம்ப் செய்கிறது. இதனால் கேமர்களுக்கு சிறந்த விளையாட்டு அனுபவம் கிடைக்கும். இதில் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யூஐ 5.1 கோர் இருக்கலாம்.

கேமரா

கேலக்ஸி ஏ05 பின்பிறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 10x வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, ஆட்டோபோஷுடன் கூடிய 2 எம்பி டெப்த் சென்சார் அடங்கும்.

முன்புறம் வாட்டர் டிராப் நாட்ச்சில் 8 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவினால் 1080 பிக்சல் தெளிவு கொண்ட வீடியோக்களை 60 எஃப்பிஎஸ்-ல் பதிவு செய்ய முடியும்.

பேட்டரி

195 கிராம் எடை கொண்ட கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

5,400mAh பேட்டரி..100W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ரியல்மீ ஜிடி 5 ப்ரோவின் விலை இதுதான்.?

இதில் ஆக்சிலரோமீட்டர், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களும் உள்ளன. டூயல் நானோ சிம் கார்டு ஸ்லாட், டூயல் 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் போன்ற அம்சங்களும் உள்ளன.

ஸ்டோரேஜ்

லைட் கிரீன், சில்வர் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 2 வேரியண்ட்டுகளில் அறிமுகமாகியுள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி 1 டிபி வரை உயர்த்த முடியும். இதில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.9,999 என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.12,499 என்ற விலைக்கும் இந்தியாவில் சாம்சங் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. மேலும், கேலக்ஸி ஏ05 போனில் 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் உறுதியளிக்கிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.