பியூட்டி குயின் நீங்க தான்! தூக்கலான அழகில் நடிகை சமந்தா!

நடிகை சமந்தா தற்போது ஆரம்ப காலகட்டத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதைப்போல சமீபத்தில் கூட உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியீட்டு இருந்தார்.

Samantha
Samantha filmcrazymedia

அதனை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற கிளாமரான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். சமந்தா செரம்பனில் எம்எஸ் கோல்ட் 3வது கிளை திறப்பு விழாவிற்காக இன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரை காண ரசிகர்கள் கூட்டமாக திரண்டார்கள் என்றே கூறலாம்.

ஜோ கொடுத்த பிரமாண்ட வெற்றி! ரியோவுக்கு குவியும் பட வாய்ப்புகள்! 

Samantha
Samantha filmcrazymedia

அந்த விழாவிற்கு செல்ல ஆடம்பரமான ஆடையை அணிந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தை தான் சமந்தா தற்போது வெளியீட்டு இருக்கிறார். சமந்தா வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . புகைப்படங்களை பார்த்த பலரும் கவிதைகளை அவருக்கு கூறி வருகிறார்கள்.

Samantha
Samantha filmcrazymedia

மேலும், மயோசிடிஸ் என்ற தசை அழற்றி நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். ஆரம்ப காலத்தை போல பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சமந்தா ‘டேக் 20’ என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். அதில் உடல்நலம் குறித்த டிப்ஸ்களை தெரிவித்து வருகிறார். மேலும் அதே சமயம் ஹிந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment