தென்னிந்தியாவிலேயே ட்விட்டர் எமோஜி பெற்ற முதல் நடிகை – மகிழ்ச்சியில் சமந்தா!

தென்னிந்தியாவிலேயே ட்விட்டர் எமோஜி பெற்ற முதல் நடிகை – மகிழ்ச்சியில் சமந்தா!

Default Image

ட்விட்டரில் தற்போது சமந்தா நடித்துள்ள ஃபேமிலி மேன் 2 – வுக்கான எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமந்தா உற்சாகத்தில் உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து திரையுலகிலும் ஏதேனும் படங்கள் வெளிவரும் பொழுது அவற்றை அறிமுகப்படுத்தியதற்காக சமூக வலை தளங்கள் சிலவற்றில் எமோஜிகளைக் கொண்டு வருவது தற்போது வழக்கமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் மெர்சல், காலா, என்ஜிகே, பிகில், மாஸ்டர் ஆகிய படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுவரை நடிகர்களுக்காக மட்டுமே தென்னிந்திய அளவில் எமோஜிகல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக நடிகைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அது நம் சமந்தாவுக்கு தான்.

தற்பொழுது சமந்தா நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 எனும் வெப்சீரிஸ் தொடருக்காக இந்த எமோஜி தற்போது வெளியிட்டுள்ளனர். அடுத்த மாதம் இந்த தொடர் வெளியாக உள்ள நிலையில் தனது ஏமோஜி வெளியாகியுள்ள மகிழ்ச்சியில் சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய முதல் எமோஜி, எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்க்கு முன் பிரியங்கா சோப்ராவுக்கு எமோஜி வெளியிடப்பட்டு இருந்தாலும், தென்னிந்திய நடிகைகள் யாருக்கும் வெளியாகவில்லை. முதல் முதலில் சமந்தாவிற்கு தான் ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டிருக்கிறது எனும் பெருமையை சமந்தா பெற்றிருக்கிறார்.  சமந்தாவின் ரசிகர்களும் தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Join our channel google news Youtube