மில்லியன்களை தாண்டும் சலார் டிரைலர்! மிரட்டல் சாதனை!

மில்லியன்களை தாண்டும் சலார் டிரைலர்! மிரட்டல் சாதனை!

salaar trailer

கேஜிஎப் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். பிருத்விராஜ், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

ஆசையை காட்டி ஏமாத்திட்டாங்க! வேதனையில் நடிகை தமன்னா காதலன்?.

அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான அந்த டிரைலர் எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த டிரைலர் சில சாதனைகளையும் படைத்து வருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டிரைலர் 5 மொழிகளில் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் வெளியான எல்லா மொழிகளையும் சேர்த்து 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது எல்லா மொழிகளிலும் சேர்த்து  150 மில்லியன்  பார்வையாளர்களை கடந்துள்ளது.  இதுவரை பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்களின் ட்ரைலர் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்ப்பை கொடுத்தது இல்லை.

முதன் முறையாக வெளியான 1 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள், மற்றும் குறுகிய காலத்தில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது அவருக்கு இது தான் முதல் முறை. ட்ரைலரை போலே படத்திற்கான டீசரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த டீசரும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 144 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube