ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அநாகரிகமாக பேசி வருகிறார் – வானதி சீனிவாசன்

ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அநாகரிகமாக பேசி வருகிறார் – வானதி சீனிவாசன்

vanathi srinivasan

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சென்னையில் நடைபெற்ற திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் கூட ஆளுநரை மாநிலத்தை விட்டு விரட்டும் அளவுக்கு சுயமரியாதையுடன் இருந்தனர்.

ஆனால் உப்பை தின்னும் தமிழர்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து உயிரிழந்த 50 பேரின் மரணத்திற்கும் ஆளுநர் ரவி தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் அவர்கள், ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தொடர்ந்து அநாகரிகமாக பேசி வருகிறார்.

ஆர்.எஸ்.பாரதி பொதுமேடைகளில் அநாகரிகமாக, ஆபாசமாக பேசி வருகிறார். இதனை அந்த கட்சியின் தலைவர்கள் ரசித்து வருகின்றனர். எதிர்கட்சியினரை வசை பாடுவதற்கு, குறிப்பாக கவர்னரை பற்றி கேவலமாக பேசுவதற்க்காகவே அவரை ஒரு குறிப்பிட்ட பதவியில் வைத்து திமுக அழகு பார்க்கிறது. திமுக ஆபாச பேச்சுக்களை ரசிக்கிறது என்று மட்டுமல்ல, அங்கீகரிக்கிறது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துளளார்.

Join our channel google news Youtube