ஆர்ஆர்ஆர் திரைப்பட நடிகர் மரணம்.! கண்ணீரில் படக்குழு

ஆர்ஆர்ஆர் திரைப்பட நடிகர் மரணம்.! கண்ணீரில் படக்குழு

Ray Stevenson

‘RRR’ படத்தில் நடித்த நடிகர் ‘ரே ஸ்டீவன்சன்’ உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமௌலியின் RRR படத்தில் வில்லனாக கவர்னர் ஸ்காட் பக்ஸனாக நடித்த அயர்லாந்து நடிகர் ‘ரே ஸ்டீவன்சன்’ காலமானார். 58 வயதாகும் இவர் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் இறந்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் படங்களில் மட்டுமின்றி. டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

RRR actor Ray Stevenson
RRR actor Ray Stevenson [Image Source : 123Telugu]

இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்கர் விருது வாங்கிய கொண்டாட்டம் அடங்குவதற்குள் ‘RRR’ பட நடிகர் இறந்துள்ளது படக்குழுவினரை கலங்க வைத்துள்ளது. அவரது திடீர் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியிடப்படவில்லை.

Ray Stevenson
Ray Stevenson [Image source :telugubulletin]
ரே ஸ்டீவன்சன் நடித்த திரைப்படங்கள்:

பனிஷர்: வார் சோன், தி தியரி ஆஃப் ஃப்ளைட் மற்றும் எச்பிஓ மற்றும் பிபிசியின் பாராட்டப்பட்ட தொலைக்காட்சித் தொடரான ரோம் ஆகியவற்றில் நடித்து ஸ்டீவன்சன் பிரபலமானார்.

Join our channel google news Youtube