உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,000-ஐ கடந்தது!

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்துவதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இதுவரை உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துள்ளது. இதில், இத்தாலி – 17,127, ஸ்பெயின் – 14,555, அமெரிக்கா – 12,857, பிரான்ஸ் – 10,238, பிரிட்டன் -6,159 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 14,46,344 பேர் பாதித்துள்ள நிலையில், 3,08,553 பேர் குணமடைந்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.