கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் – தலைமைச் செயலாளர்

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் கலந்துகொண்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்படுவது கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்