வங்காளதேசத்தின் மத நல துறை மந்திரி காலமானார்!

வங்காளதேசத்தின் மத நல துறை மந்திரி உடல்நலக் குறைவால் காலமானார்.

மந்திரி முகமது அப்துல்லா, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான மந்திரி சபையில் மத நல துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர். இவருக்கு வயது 74. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து இவரை உடனடியாக, தலைநகர் டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது  மரணத்திற்கு அந்நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.