பில்லா பட இயக்குனரின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக இயக்கியுள்ள ஷெர்ஷா என்ற பாலிவுட் திரைப்படம் ஜூலை 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார்.  தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார். ஆம், கடந்த 1999 ஆம் ஆண்டு  இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத் ராவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படமாக எடுக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம பத்ரா வேடத்தில் ஹிந்தி நடிகரான சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து இவர் கூறுகையில், “விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் உங்களிற்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஜூலை 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்க்க அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.