வேலூரில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு பின்னர் ஏற்பு – நடந்தது என்ன?

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வேட்புமனு பரிசீலனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. அப்போது, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதிமுக வேட்பாளர் சண்முகம் கலந்து கொள்ளவில்லை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , பொருளாளர் துரைமுருகன் உட்பட அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

 

அதிமுக வேட்பாளர் A .C சண்முகம் வேட்புமனு பரிசீலனையின் போது அங்கு இருந்த பலர், புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருக்கும் சண்முகம் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதை ஏற்க முடியாதது என்று கூறினர்.இத அடுத்து அவரது மனு ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதே போல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது பணப்பட்டுவாடா புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு  நிலுவையில் இருக்கும் நிலையில் வேட்பளர் போட்டியிட முடியாது என்றனர், இதனால் கதிர் ஆனந்த் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின், பிற்பகல் 1.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த A .C சண்முகம் தான் அதிமுக உறுப்பினர் என்று கூறி உறுப்பினர் அட்டையை காண்பித்தார். பின்னர் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களின் வழக்கு சம்பத்தப்பட்ட ஆவணங்களை வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தார். அதனால் அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.