பழைய ஃபார்முக்கு திரும்பிய ஷங்கர்.! பிரமாண்ட செட்.! வெளிநாட்டு நடன கலைஞர்கள்.!

பழைய ஃபார்முக்கு திரும்பிய ஷங்கர்.! பிரமாண்ட செட்.! வெளிநாட்டு நடன கலைஞர்கள்.!

Default Image

ஹைதிராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷங்கர் படத்துக்கான பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் கடைசியாக இயக்கி வெளியான ஐ மற்றும் 2.O ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வசூலை வாரிக்குவித்தன. இருந்தாலும் கதைக்களம் முந்தைய ஷங்கர் படம் போல இல்லை என்ற பேச்சுகளும் எழுந்தன.

அடுத்து, இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படம் தயாரானது. ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் அடுத்தகட்டம் நகராமல் இழுத்தடித்து வந்தது. அதற்குள் ஷங்கர் தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை திரும்பிவிட்டார்.

அங்கு ராம் சரணுக்கு கதை கூறி அந்த படத்தை தற்போது இயக்கி வருகிறார். அந்த படத்தின் பாடல் காட்சிக்காக ஹைதிராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போடப்பட்டு உள்ளது. மேலும், வெளிநாட்டு நடன கலைஞர்களை வரவழைத்து அவர்களுக்கு நம்மூர் நடனமாஸ்டர் ஜானி பயிற்சி கொடுத்து பிரமாண்ட பாடல் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.

Join our channel google news Youtube