ஒரே வாரத்தில் ஹிந்தி சினிமாவை அலற வைத்த ரன்பிர் கபூர்.! உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

ஒரே வாரத்தில் ஹிந்தி சினிமாவை அலற வைத்த ரன்பிர் கபூர்.! உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?

Animal Box Office

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. அதன்படி, இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 338 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது உலகளவில் ரூ.600 கோடியை கடந்துவிடும் என தெரிகிறது.

ஏழாவது நாளான நேற்று (வியாழன்) அன்று இப்படம் இந்தியாவில் ரூ.25.50 கோடியை ஈட்டியது. தொடக்க நாளில் இருந்தே இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஆக்கிரமிப்பு செய்து வரும், அனிமல் திரைப்படம் இந்திய அளவில் மொத்த வசூல் 338.85 கோடியாக உள்ளது. தற்பொழுது, இப்படம் உலகளவில் எவ்வளவு வசூலித்திருக்கிறது எனபது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

500 கோடியை தாண்டிய அனிமல் திரைப்படம்! பாலிவுட்டில் தடம் பதித்த ரன்பீர் கபூர்…

பாக்ஸ் ஆபிஸ்

உலகம் முழுவதும் அனிமல் திரைப்படம் முதல் நாளில் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.

இரண்டாம் நாளில் ரூ.120 கோடி

மூன்றாம் நாளில் ரூ.120 கோடி

நான்காம் நாளில் ரூ.69 கோடி

ஐந்தாம் நாளில் ரூ.56 கோடி

ஆறாம் நாளில் ரூ.46.60 கோடி

ஏழாம் நாளான நேற்று ரூ.35.7 என வசூல் செய்து மொத்தம் 563.30 கோடி ரூபாய் வாசு செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. விரைவில் 1000 கோடி கிளப்பில் இணையுமா என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் உள்ளது.

ஆடை இல்லாமல் நடிப்பது தவறு இல்லை! அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு!

அனிமல்

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

Join our channel google news Youtube