ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!

ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!

Default Image

விமான போக்குவரத்திற்க்கான பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா_விற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

C.B.I சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எதிரொலியையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா_வை  கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் புதிய பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Join our channel google news Youtube