வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர் ஊழலில் ராஜீவ் சக்சேனாவுக்கு சிறை…!!

வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர் ஊழலில் ராஜீவ் சக்சேனாவுக்கு சிறை…!!

Default Image

வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் ராஜீவ் சக்சேனா_வுக்கு சிறை தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின்ஆட்சியில் இத்தாலி நாட்டை சேர்ந்த வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாகவும் ,  அந்த நிறுவனம் பல்வேறு தரப்பினருக்கு சுமார் ரூபாய் 450 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த முறைகேடு குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக   தேடப்பட்டு வந்த துபாயைச் சேர்ந்த ராஜீவ் சக்சேனா மற்றும் தீபக் தல்வார் ஆகியோரை அமுலாக்கத்துறையினர் கைது செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Join our channel google news Youtube