ராஜஸ்தான் இடைத்தேர்தல்…பிஜேபி வெற்றிகரமான தோல்வி…!!

ராஜஸ்தான் இடைத்தேர்தல்…பிஜேபி வெற்றிகரமான தோல்வி…!!

Default Image

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்துள்ளது.

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமணன் சிங்க் மரணமடைந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள 199 சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.பதிவாகிய வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.ராம்கர் தொகுதியில் இடைத்தேதலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷாபியா ஜிபேர் 83311 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் 71,083 வாக்குகள் எடுத்த நிலையில் , பாரதீய ஜனதா வேட்பாளரை விட 12,228 வாக்குகள் அதிகமாக பெற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

 

Join our channel google news Youtube