மழை பாதிப்பு..1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாநகராட்சி அறிவிப்பு

மழை பாதிப்பு..1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாநகராட்சி அறிவிப்பு

chennai rain

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மழையால் மரங்கள் விழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றம் தொடர்பான புகார்களுக்கு 044 4567 4567 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். குடிநீர் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916-ஐ மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube