தெறிக்கும் ஆக்சன்…மிரட்டும் விக்ரம் பிரபு! ‘ரெய்டு’ படத்தின் ட்வீட்டர் விமர்சனம்!

நடிகர் விக்ரம் பிரபு கடைசியாக இருகப்பற்று திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் பிரபு ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.

மேலும், அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி, ரெய்டு அனந்திகா உள்ளிட்ட பல பிரபலன்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். படத்திற்க்கு கொம்பன், விருமன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா வசனம் எழுதி இருக்கிறார்.

இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

இந்த திரைப்படத்திற்கு டீசர் மற்றும் ட்ரைலர் பாடல்கள் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இன்று வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவும், இறுக்கப்பற்று படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவுக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் எனவும் கூறி வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்வீட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த ஒருவர் ” ரெய்டு திரைப்படம் நன்றாக இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் விக்ரம் பிரபு நடிப்பு நன்றாக இருந்தது” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” படத்தின் ஆக்சன் காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த படமும் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு வெற்றிப்படமாக அமையும்” என தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார்.

படத்தை பார்த்த மற்றோருவர் ” ரெய்டு திரைப்படம் அருமையாக இருக்கிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் அருமையாக இசையமைத்து கொடுத்துள்ளார். படம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவிற்கு அவருடைய இசையும் நன்றாக இருக்கிறது. படத்தை குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம்” எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ரெய்டு திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதன் காரணமாக இருகப்பற்று படம் வெற்றி பெற்றது போல இந்த திரைப்படமும் வெற்றிப்படமாக அவருக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.