10 லட்சம் பேருக்கு 149 பரிசோதனை கருவிகளே உள்ளன.! – ராகுல் காந்தி ட்வீட்.!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் பி.சி.ஆர் முறைப்படி டெஸ்ட் செய்யப்பட்டு கொரோனா உறுதிப்படுத்தப்படுகிறது. இதனை தவிர்த்து, விரைவாக முடிவுகளை அறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவர்,’  கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க இந்தியா தாமதித்துவிட்டது. அதனால், பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
10 லட்சம் பேருக்கு 149 என்ற விகிதத்திலேயே இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்ளன.’ என அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.