கலைஞர் கருணாநிதி நினைவு தினம்.! மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல்காந்தி.!

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்.! மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல்காந்தி.!

Congress MP Rahul Gandhi paid tribute to Kalaignar Karunanidhi Photo

இன்று தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் அமைதி பேரணி நடத்தி மரியாதை செலுத்தினார்.

அதே பல தமிழகத்தில் பலவாறு இடங்களில் திமுக  தலைவர்கள், தொண்டர்கள் கலைஞர் நினைவு தினத்திற்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

அதே போல, டெல்லியில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி புகைப்படத்திற்கு , காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார். உடன், தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் உடன் இருந்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube