அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.!

சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன.

இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வடிவமைப்பு நீருக்கு அடியில் சுலபமாக செல்லும் வகையில், சுறா மீன் போல உள்ளது.

இதில் இருக்கக்கூடிய மோட்டார், லைட்டிங், கேமரா மற்றும் பேட்டரி மாட்யூல்களை எளிதாகப் பிரித்து மாற்றிக் கொள்ளலாம். இதன் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் இமேஜிங் அமைப்பு, ஏஐ அம்சங்கள் சந்தைகளில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த அண்டர்வாட்டர் ரோபோக்களில் ஒன்றாக பிபிஷ் இ-கோவை மாற்றியுள்ளது.

அண்டர்வாட்டர் ட்ரோன் ரோபோட்டில் ஒரே நேரத்தில் 6 கருவிகளைப் பொருத்த முடியும். இதனால் பல்வேறு கடல்சார் சூழல்கள் மற்றும் சவாலான பணிகளைக் கையாள முடியும். ட்ரோனில் ஒரு தனித்துவமான ஹாட்-ஸ்வாப்பபிள் பேட்டரி அமைப்பு உள்ளது. இதனால் நீங்கள் ட்ரோனை ஆஃப் செய்யாமல் பேட்டரியை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.

இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2.5 மணிநேரம் வரை நெருக்கடியில் இயங்கும். 50 நிமிடங்களில் 90% சார்ஜை எட்டக்கூடிய வேகமான சார்ஜிங் அம்சமும் உள்ளது. பிபிஷ் இ-கோவின் க்திவாய்ந்த ரிங்-விங் மோட்டார்கள் நீருக்கடியில் நீரோட்டங்களை சமாளித்து, மணிக்கு 5.6 கிமீ வேகத்தில் செல்லும்.

மேலும், நீருக்கு அடியில் பார்ப்பதற்கு 4 கே யுஎச்டி ஃபிஷே லென்ஸ் (4K UHD Fisheye Lens) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 30 எஃப்பிஎஸில் வீடியோவைப் பதிவு செய்ய முடியும். இந்த விடியோவை சேமித்து வைக்க தனியாக ஒரு மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது,  இதில் 10,000 லுமன்ஸ் கொண்ட அண்டர்வாட்டர் லைட்டுகள் உள்ளதால், 160 டிகிரி வரை இருட்டான பெருங்கடலின் அடியில் பார்க்க முடியும்.

பிபிஷ் இ-கோவின் ஏஐ அமைப்பு நீருக்கு அடியில் பல கண்காணிப்பு வேலைகளை செய்வதற்கும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் பெருமளவில் உதவியாக இருக்கிறது. அதோடு கப்பல் துறைமுகங்கள் தூண்கள் மற்றும் உடைந்த கப்பல்களை அடையாளம் காண இது உதவுகிறது. இந்த பிபிஷ் இ-கோ அண்டர்வாட்டர் ட்ரோன் ஆனது அமெரிக்காவின் அமேசான் இணையத்தளத்தில் $7,348 (ரூ.6,13,000) என்ற விலையில் விற்பனைக்கு உள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.