7 நாட்களில் வெளியேறுங்கள்.! அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு குடிசைவாசிகளுக்கு நோட்டிஸ்.!

  • அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகையையொட்டி அகமதாபாத்தில் மோடேரா பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக வருகிறார். அப்போது வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டிரம்ப் பயணிக்கிறார். பின்னர் அங்கு அவருக்கு, “நமஸ்தே டிரம்ப்” என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளிக்கிறார். இதனிடையே டிரம்ப் வருகையையொட்டி சர்தார் வல்லாபாய் ஸ்டேடியம் அருகே உள்ள மோடேரா (Motera) பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்துள்ளனர்.

இந்நிலையில், 22 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் அவர்களை அங்கிருந்து விரைவில் வெளியேற சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதால், வெளியூருக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளின் தரப்பில் கூறுைகயில், இந்த குடிசைவாசிகள் நகர திட்டமிடல் திட்டங்களில் ஒன்றின் கீழ் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நோட்டீஸ் அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்றனர். இதற்கு முன் டிரம்ப் வருகையொட்டி அப்பகுதியில் குடிசைகளை மறைத்து சுவர்கள் எழுப்பப்பட்டு அழகுபடுத்தப்பட்டது என குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்