‘பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர்’ – பிரதமர் மோடி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் மல்லிகார்ஜுனே..!

‘பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர்’ – பிரதமர் மோடி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் மல்லிகார்ஜுனே..!

mallikarjune karge

பிரதமர் மோடி குறித்து கார்கே பேசிய கருத்துக்கு மன்னிப்பு கூறியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பிரச்சார கூட்டத்தில் ஈடுபட்டார்.

PM Modi
[Image source : ANI]

அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா என்று நீங்கள் நினைக்க கூடும். ஆனால் அவரை நக்கினால் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று பேசியுள்ளார். இவரது பேச்சை சர்ச்சை ஏற்படுத்திய நிலையில்,   இது குறித்து விளக்கம் அளித்த கார்கே, நான் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், அவருடைய சித்தாந்தம் பாம்பு போன்றது. அதை தொட நினைத்தால் மரணம் நிச்சயம் என்று சொல்ல வந்தேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

மன்னிப்பு கோரினார் கார்கே 

கார்கே கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் முன்வைத்த நிலையில், பிரதமர் மோடி குறித்து கார்கே பேசிய கருத்துக்கு மன்னிப்பு கூறியுள்ளார். தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தும் படி இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு மன்னிப்பு கூறியுள்ளார்.

Join our channel google news Youtube