இன்று நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

இன்று நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை கேரளாவின் கொச்சி நகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று கேரளாவுக்கு வருகை புரிந்தார். இந்த நிலையில், இன்று நாட்டில் முதல் முறையாக கொச்சியில் நீர்வழி மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது.

முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவை

PM MODI
File Image
இந்த நிலையில், நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை கேரளாவின் கொச்சி நகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒட்டுமொத்தமாக 78 படகுகள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு படகிலும் 50 இருக்கைகள் உள்ள நிலையில், ஒரு படகில் 100 பயணிகள் செல்ல முடியும். குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube