தி கேரளா ஸ்டோரி படத்தை பிரதமர் மோடி ஆதரிக்கிறார்…சீமான் பேச்சு.!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னையில் முற்றுகை போராட்டம்நடைபெற்றது போராட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் ” மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும். 

கேரளா ஸ்டோரி என்ற மாநிலத்தின் பெயர் கொண்ட ஒரு திரைப்படம் வருகிறது. அங்கு இருக்கும் 32,000 பெண்கள், இளைஞர்களை மதம்மாற்றி வேறு நாடுகளுக்கு அழைத்து சென்று அவர்களை தீவிரவாத பயிற்சி கொடுத்து இந்த நாட்டுக்குள் அனுப்பி குழப்பம் செய்வது போல எடுத்துள்ளார்கள்.

படத்தை எடுத்த இயக்குனர்களுக்கு தெரிகிறது உளவு துறைக்கு தெரியவில்லையா இந்த ராணுவம் அமைச்சகத்துக்கு தெரியாதா..? எதற்காக படத்தை தடுக்கவில்லை. இந்த திரைப்படத்தை மோடியே ஆதரிக்கிறார். ஒரு குறிப்பிட் மதத்தினருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த தி கோளா ஸ்டோரி படத்தை பிரதமர் மோடியே ஆதரிக்கிறார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது கர்நாடகாவில் வந்து பேசும் பொதுக்கூட்டத்தில் இந்த கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று பிரதமர் கூறுகிறார்.  இதே மாதிரி கொடுமை எங்கேயாவது இருக்கிறதா.?” என கூறியுள்ளார். 

மேலும், கர்நாடகா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி ”  தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது. தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதத்தை ஆதரிக்கிறது” என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.