ஒருநாள் முன்பே விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்படுவார் என உச்சநீதிமன்ற மனுவில் கணிப்பு.!

உச்சநீதிமன்றத்தில் நேற்று மாலை  தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்படுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கன்ஷ்யம் உபாத்யாய் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனியில் இருந்து கைது செய்யப்பட்ட பின்னர் துபே ஒரு “போலி” என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் துபே உத்தரப்பிரதேச காவல்துறையினர் அவரது காவலைப் பெற்றவுடன் மற்ற சக குற்றவாளிகளைப் போலவே  கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஜூலை 2 -ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு விகாஸ் துபே  நான்கு கூட்டாளிகள் கொல்லப்பட்டபோது செய்ததைப் போலவே உத்தரப்பிரதேச காவல்துறையும் துபேக்கு அதே கதையை உருவாக்கும்” என்று உபாத்யாய் கூறினார்.

 தனக்கு துபே மீது எந்த அனுதாபமும் இல்லை என்று கூறினார்.துபே மீது 60 கிரிமினல் வழக்குகள் இருந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தங்கள் கடமையை நேர்மையாக நிறைவேற்றாததாலும்,  ஊழலில் ஈடுபட்டதாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்று வழக்கறிஞர் கூறினார்.

கான்பூர் என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே  இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan