பிரதீப்பை எதுக்கு வெளிய அனுப்புனீங்கனு கேள்வி கமலுக்கு வரப்போகுது! எச்சரித்த பிரபல இயக்குனர்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேறியது ரசிகர்களின் மனதில் தீராத ஒரு சோக கதையாக இருந்து வருகிறது. அவர் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல் தரைகுறைவாக பேசி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு பிக் பாஸ் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது.

அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்லவேண்டும். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதற்கு முன்பு அவருடைய தரப்பு நியாத்தை கமல் கேட்காததால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், ரட்சகன் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரவீன் காந்தி அண்மையில் ஒரு பேட்டியில் பிக் பாஸிலிருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வருகிறது. அந்த படத்தை நான் எந்த மன நிலையில் பார்க்க முடியும்? அவர் என்ன பேசினாலும் எனக்கு காமெடியாக இருக்கும்.

பிக் பாஸ் பிரதீப்பின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் பிரபல ஓடிடி நிறுவனம்!

கண்டிப்பாக இந்தியன் 2 படம் வெளியான பிறகு திரையரங்குகளுக்குள் படம் பார்ப்பவர்கள் கமல்ஹாசன் எதாவது சீரியசான வசனம் பேசும்போது பிரதீப் ஆண்டனியை எதற்கு வெளியே அனுப்புனீர்கள்? என்ற கேள்வியை கண்டிப்பாக கேட்பார்கள். எனவே. இதைப்பற்றி எல்லாம் கமல்ஹாசன் சார் யோசித்திருக்கவேண்டும். இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எல்லாம்  விட கூடாது.

எல்லாரும் இளம் வயதில் அப்படி தான் இருந்திருப்பார்கள் எனவே நாம் தான் அதனை சொல்லி கொடுத்து அவர்களை திருதிக்கொடுக்கவேண்டும். அவர்கள் தப்பு செய்தால் கூட அப்டியே விட்டுவிட கூடாது நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கவேண்டும். என்னை பொறுத்தவரை பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பியது சரியான முடிவாக தெரியவில்லை” எனவும் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.