போத்தீஸ் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் மறைவு.! சொந்த ஊரில் நல்லடக்கம்…

Sadayandi Moopanar – தமிழ்நாட்டில் நெல்லை, திருச்சி, சென்னை என பல்வேறு நகரங்களில் ஜவுளி துறையில் முன்னணியில் இருக்கும் போத்தீஸ் நிறுவனத்தின் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் (வயது 84) நேற்று முன்தினம் இரவு சென்னையில் தனது மகன் வீட்டில் உயிரிழந்தார்.

Read More – ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

சடையாண்டி மூப்பனார் நெசவாளியான தனது தந்தை போத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜவுளி விற்பனை செய்து வந்ததை கவனித்து வந்து பின்னர் தனது தனது தந்தை சிறியதாக ஆரம்பித்த போத்தி அண்ட் சன்ஸ் ஜவுளி கடையை சடையாண்டி மூப்பனார் பின்னர் திருநெல்வேலியில் போத்தீஸ் என்று ஜவுளி கடையை தொடங்கினார் . அதன் பிறகு  2000 காலகட்டத்தில் சென்னையில் போத்தீஸ் ஜவுளி கடையை தொடங்கும் அளவுக்கு முன்னேறினார்.

Read More – ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சிசிடிவி வெளியானது..!

தற்போது வரை நான்கு தலைமுறைகளாக போத்தீஸ் ஜவுளி நிறுவனம் வருகிறது. மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யத்தை கட்டமைத்த சடையாண்டி மூப்பனார் மறைவு காரணமாக நேற்று இந்தியா முழுக்க உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள் மூடப்பட்டன.

மறைந்த போத்தீஸ் நிறுவனர் சடையாண்டியின் சொந்த மாவட்டமான விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள பூர்வீக கிராமத்தில் நேற்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment