பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.!

RIP Visveshwara Rao: பிரபல நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். 

சமீப காலமாக தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்த உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே இரண்டு தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26-ல் நடிகர் சேசு, மார்ச் 29 -ல் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தனர்.

இன்று காலை நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 62 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், தற்போது அவரது உடல் சென்னை சிறுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

தொடர் மரணத்தால் ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் உள்ளது. ‘பிதாமகன்’ படத்தில் லைலாவின் தந்தையாக நடித்திருந்த நடிகர் விஸ்வேஸ்வர ராவ், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.