‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்.!

‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்.!

Default Image

பூவே பூச்சூடவா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் வைஷ்ணவி ஜெய்க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பூவே பூச்சூடவா.இதில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதில் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவும்,அவரது அக்கா புருஷனாக நடித்து வரும் மதனும் சமீபத்தில் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள்.

அது மட்டுமின்றி இத்தொடரில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த தனலட்சுமிக்கும் கடந்த ஆண்டு தனது காதலருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது பூவே பூச்சூடவா தொடரில் முக்கிய ரோலில் நடித்து வரும் வைஷ்ணவி ஜெய்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் மதன் ,ரேஷ்மா ,மைனா நந்தினி,யோகேஷ்  உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.தற்போது இந்த புதுமண தம்பதிக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

poove poochudava

 

poove poochudava

Join our channel google news Youtube