அண்ணாமலை வெளில நடமாட முடியாது..! உனக்கு வயசும் போதாது.. அனுபவமும் போதாது – புகழேந்தி

pugalenthi

ஜெயலலிதாவை பேசிவிட்டு தமிழகத்தில் அரசியல் பேச வேண்டும் என்றால் அண்ணாமலை அதை மறந்து விட வேண்டும் என புகழேந்தி பேட்டி.

நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை  அவர்கள், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவர்கள், அண்ணாமலையை வளர்த்து விட்டதே எடப்பாடிதான். மத்திய அரசு இருக்கும் தைரியத்தில் அண்ணாமலை பேசக்கூடாது. ஜெயலலிதாவை பேசிவிட்டு தமிழகத்தில் அரசியல் பேச வேண்டும் என்றால் அண்ணாமலை அதை மறந்து விட வேண்டும். வெளியிலே வர முடியாது. பெண்கள் துரத்தி துரத்தி அடிக்கிற காட்சியை தமிழகம் பார்க்கும். ஜெயலலிதாவை தமிழக மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள்.

ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியதை உள்ளது. ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. எந்த அடிப்படையில் அவரை குற்றவாளி என அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை வெளியில் நடமாட முடியாது. இதை அரசியல் ரீதியாக சொல்கிறேன். அண்ணாமலை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எவ்வளவோ பேரை நாங்கள் அரசியலில் பார்த்து விட்டோம்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்