மகளிர் உரிமை தொகை திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது -ஈபிஎஸ்
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி செயல்படும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மகளிர் உரிமை தொகை திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மகளிர் உரிமை தொகை திட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜகவுடன் தான் கூட்டணி. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி செயல்படும். ஆதாரங்களின் அடிப்படையிலே அமலாக கடைசியாக நடத்துகிறது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். எனக்கும், குடிக்கும் சம்பந்தம் கிடையாது என தெரிவித்துள்ளார்.