கென்யாவின் அதிபராக செவ்வாயன்று பதவியேற்றார் வில்லியம் ரூட்டோ. கென்யாவின் 5 ஆவது அதிபராகப் பதவியேற்ற வில்லியம் ரூட்டோ கடந்த பத்தாண்டுகளில் துணை அதிபராக இருந்து வந்தார். ரூட்டோ வால் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரின் மேல்முறையீட்டு சவாலை உச்ச நீதிமன்றம் நிராகரித்த ஒரு வாரத்திற்கு பிறகு ரூட்டோ பதவி ஏற்றுள்ளார். ரூட்டோ தன்னை பின் தங்கிய “ஹஸ்ட்லர்” என்று பிரகடனம் செய்து வெற்றி பெற்றுள்ளார்.
தற்பொழுது கிழக்கு ஆப்பிரிக்காவில் நிலவி வரும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை, ரூட்டோ எதிர் கொள்ளவேண்டும். மேலும் அங்கு உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம், வேலையின்மை அதிகமாக உள்ளது, மற்றும் பொதுக் கடன்களும் அதிகரித்து வருகிறது.
மேலும் ரூட்டோ பதவியேற்பு விழாவில் கூறியதாவது, ஒரு கிராமத்து சிறுவன் ஜனாதிபதி ஆகி விட்டான், கிழக்கு ஆப்பிரிக்காவில் நிலவி வரும் கடும் வறட்சி உணவு நெருக்கடியை அதிகரிக்கச் செய்வதால் அடுத்த வாரம் 40 மில்லியன் அரை விலை உர மூட்டைகள் கிடைக்க ரூட்டோ உறுதி அளித்தார்.
மேலும் ரூட்டோ தனது உரையில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வைப்பதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத எரிசக்தியை உருவாக்கும் திட்டங்களில் கவனம் செலுத்த போவதாகவும் உறுதி அளித்தார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு ரூட்டோ நான்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் சுற்றுச்சூழல் மற்றும் நில நீதிமன்ற நீதிபதியையும் நியமிப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…