மகளிர் உரிமை திட்டத்தில் வழங்கப்படும் தொகை உயர்த்தப்படுமா? – அமைச்சர் கீதாஜீவன் பதில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, செப்.15-ஆம் தேதி தகுதி வாய்ந்த மகளிருக்கு இந்த மாதம் ரூ.1000 வழங்கும் , கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை செலுத்தப்பட்டுள்ளது.
தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்து இருந்த நிலையில் இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.1000 மேலும் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது.
தகுதியுள்ளவர்கள், விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். மேலும், அமைச்சர் கீதாஜீவனிடம் பாஜக-அதிமுக முறிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் பதிலளிக்காமல் சென்று விட்டார்.