சசிகலா வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள்-சுப்பிரமணியன் சுவாமி..!
கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி நிரூபிக்கபட்டு 4 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் கிடையாது தண்டனை முழுவதும் அனுபவித்த பின்புதான் சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , சசிகலா இன்னும் ஓன்று அல்லது ஒன்றைரை ஆண்டுக்குள் விடுதலை ஆகி விடுவார். அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என கூறினார்.