புதிய வைரஸின் தாக்கம் எதுவந்தாலும் அதனை எதிர்கொள்ள கட்டமைப்பு சரியாக உள்ளது – அமைச்சர் .சுப்பிரமணியன்
புதிய வைரஸின் தாக்கம் எதுவந்தாலும் அதனை எதிர்கொள்ள கட்டமைப்பு சரியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலை சமுதாய நலக்கூடத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் சிறப்பு மருத்துவ மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் புதிய வைரஸின் தாக்கம் இல்லை. புதிய வைரஸின் தாக்கம் எதுவந்தாலும் அதனை எதிர்கொள்ள கட்டமைப்பு சரியாக உள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளது.
மேலும், செவிலியர் பர்தா அணிந்திருந்தது குறித்து பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.