மண்ணுக்கும் மக்களுக்கும் போராடத் தயாராக உள்ளோம் என அன்புமணி ராமதாஸ் பேட்டி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நெய்வேலியில் நடந்த போராட்டம் விவசாயிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் போலீசாரை ஏவி விட்டு தமிழ்நாடு அரசு கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அமைச்சர்கள் கூறிவரும் நிலையில், இன்னும் எதற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது? விவசாயிகளுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்க கூடாது. என்.எல்.சி விவசாயத்திற்கு மட்டும் எதிரானது கிடையாது, தமிழ்நாட்டிற்கே எதிரானது; என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடரும்.
மண்ணுக்கும் மக்களுக்கும் போராடத் தயாராக உள்ளோம். NLC, நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். 2 ஆண்டுகளில் ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது திமுக. விவசாயிகள் விரோத போக்கை அரசு கைவிட வேண்டும். அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா? மனசாட்சி இல்லாத பேய்கள் தான் விளைந்த பயிர்களை அழிக்கும். என்எல்சிக்கு எதிராக கைது செய்யப்பட்ட அப்பாவி பாமக தொண்டர்களை விடுதலை செய்யவேண்டும்; உழவர்களின் உணர்வுகளை மதித்து என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தி, என்எல்சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து அரசு அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நேற்று என்.எல்.சி நிறுவனத்தை எதிர்த்து நெய்வேலியில் பாமக சார்பில், போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறையினருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பின் நேற்று மாலை அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டனர். இதில் 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…