நடிகர் விஜய் செய்திருப்பது நல்ல விஷயம்தானே…! – அன்பில் மகேஷ்

நடிகர் விஜய் செய்திருப்பது நல்ல விஷயம்தானே, அவர் மாணவர்களுக்காக தான் செய்கிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். வரும் 19-ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10,12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள் மேற்கொண்டு கல்வியை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படிப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த கடிதம் அனுப்பப்படும் என்றும், முதல்வர் எழுதிய கடிதத்தையும் வாசித்தார். பின் அவரிடம், செய்தியாளர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலை தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் செய்திருப்பது நல்ல விஷயம்தானே, அவர் மாணவர்களுக்காக தான் செய்கிறார் என பாராட்டியுள்ளார்.