மேற்கு வங்கமும் "திராவிட மண்" தான் – திரிணாமுல் எம்.பி பேச்சு !
மேற்கு வங்களா மாநிலமும் திராவிடர்கள் இருந்த மண் தான் என்று மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுகந்த் சேகர் ராய் மாநிலங்களவையில் கடந்த 27ம் தேதி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரில் இருக்கும் “வங்களாம்” என்ற வார்த்தியை நீக்கி “பங்களா” வார்த்தையை சேர்த்து கோரி மாநிலங்களைவையில் குரல் எழுப்பினர் சுகந்த் சேகர் ராய் . பங்களா என்ற வார்த்தைக்கு விளக்கம் கூறியுள்ள அவர் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இனத்தை சேர்ந்த பங்கா என்ற பூர்வ மலைவாழ் மக்கள் குடியேறியதாகவும் நாளடைவில், அவர்களே பமேற்கு வங்கத்தின் பூர்வ குடியின மக்களாய் மாறினர் என்றும் கூறியுள்ளார் . அவர்களது பெயரிலே பங்களா என்ற வார்த்தை உருவானதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வங்கத்தில் நீண்ட நாட்களுக்கு திராவிட வார்த்தை ஒளிந்துள்ளது. இதே போல் மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அவர்களும் மேற்கு வங்க மண் திராவிட பாரம்பரியம் கொண்டது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து திராவிடம் என்ற வார்த்தை ஒழித்து வந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்திலும் ஒளிந்துள்ளது.